All acterss photo

Saturday, January 10, 2009

கவிதைகள்

kavithai











உலகம்
என்று திருந்தும்




தேவியே திருவாய் மொழி
ஆவியே தருவாய் விளி
பாவியே கருவாய்- ஒளி
தேடினேன் உனை நாடினேன்.




தேகமே தீயில் வேகுதே
மேகமே இருளில் மூழ்குதே
தாகமே நாவில் தோன்றுதே-தக்க
தருணங்கள் விலகி ஓடுதே....
-
யுவா-





">



இதுதான் காதல்

தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்

தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போ
கும்!
-யுவா-





இவர்களை வாழவிடுங்கள்.



எதிர்பாராத சந்திப்பும்
இனமறியாத நட்பும்
ஏற்படுத்திய உறவால்....
அவர்களும் காதலர்களாயினர்.




காலங்கள் உருண்டோடி....
காதலுக்கு மரியாதைசெய்ய..
இல்வாழ்வில் இணைந்திடவே
இருமனங்களும் சம்மதித்தன.




ஆனாலும் துரதிர்ஸ்டம்......!
சாக்கடை மலரொன்று
சந்தன மரத்துடன்
சல்லாபமா............?





வர்க்கத்துக்குள் வகைபிரித்து
வேடிக்கை பார்க்கும்
மனிதக் கூட்டம்

தடுத்து நிறுத்தி

சங்கடப் படுத்தியது.




சங்கடங்கள் தாங்காமல்
உண்மையான உறவின்
புனிதத்தை புரியவைக்க
புண்பட்ட இதயங்கள்போராடி...
தோற்றும் போயின.............!
-யுவா-







ஏனோ பிடித்திருக்க்கின்றது







தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
பச்சை வயல்களும் பிடிக்கவில்லை
யுத்தம் புரியும் இ ந்நாடும் பிடிக்கவில்லை..






விரும்பி எழுதும் கவிதை பிடிக்கவில்லை
சிரிக்கும் குழந்தைமுகம் காண பிடிக்கவில்லை
அழகான என் காதலும் பிடிக்கவில்லை
கலகலப்பான நட்பும் பிடிக்கவில்லை...






என்னை விரும்பும் உன்னை பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை
நாம் ரசித்த எதுவுமே பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்க்கின்றது எனக்கு ..........!
-யுவா-








முதல்காதல்






முதல் மலராய் மலர்ந்தவலே
என் இதயத்தில் விழுந்தவளே
எங்கே உன் குரலோசை?
காணவில்லை வளையோசை.



யுவா












அழியாத காதல்




உன்னை விட்டு நான் பிரிந்து
பல ஆண்டுகளோ கடந்து போச்சு
உன் நினைவாலே தினம் தினம்
துடிக்குதிங்கே என் மூச்சு
- -யுவா-





No comments:

Post a Comment