Saturday, January 31, 2009
Sunday, January 18, 2009
Science&Technolog
தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்
Samsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது. இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
.
தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப்பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்குவந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத்தூக்க வேண்டியிராது
.
செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயம் கிடைத்தது
பூமியில் காணப்படும் மீத்தேனின் 90 சதவீதம் வாழும் உயிரினங்களால் வெளிப்படுத்தப்படுபவை. எனவே செவ்வாய்க் கிரகத்திலும் உயிரினங்கள் தான் அதை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். நுண்ணுயிரிகள் மூலம் வெளிப்படுத்தப்படும் வாயுவாக இது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்
- yuva- 18/01/2009
விண் கற்கள் பூமியில் மோதக் கூடிய அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்
விண் கற்கள் பூமியின் மீது மோதக் கூடிய அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கு சில தடவைகள் பூமி மீது விண் கற்கள் மோதுவது வழமையானதொன்றன ஆய்வாளர்கள் சுட்க்காட்டுகின்றனர்.
பிரபஞ்சத்திலிருந்து பூமி மீது மோதவரும் விண் கற்கள் தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்கு வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாரிய பொருட்கள் பூமி மீது மோதுண்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடும் எனவும் பேர்ன் வானசாஸ்திர நிபுணர் இன்கோ லியா தெரிவித்துள்ளார்.
எமது வாழ் காலத்தில் இவ்வாறானதோர் அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் சர்வதேச வானவியல் தினம் அனுஸ்டிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது